உள்நாட்டு செய்திகள்

சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை…

கடந்த 25ஆம் திகதி நீதிமன்ற சட்டதிட்டங்கள் மற்றும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறி பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொடை நீதவான் நீதிமன்றிற்கு அறிக்கையை சமர்ப்பித்து சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கும், குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வெவ்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்ட ​காணொளிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் நீதிமன்ற நீதவானின் அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளிகளைப் பெற்று அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்து பிரதான சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

#rishma

Related posts

ஊழல் மற்றும் அரசியல் நெருக்கடியினால் ஜனாதிபதி பதவி இராஜினாமா….

wpengine

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு…

wpengine

நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் உள்ளதென CID தெரிவிப்பு…

wpengine