உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதென்பது வதந்தி – ஜெகத் புஸ்பகுமார

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம் இணையப் போவதாக வெளியான தகவலை பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஜெகத் புஸ்பகுமார மறுத்துள்ளார்.

மேலும், தாம் ஏற்கனவே மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு வெற்றிப் பெறமுடியாதவர்களே இந்த கதையை பரப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1994ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ள தமக்கு அதனை கைவிடும் எண்ணம்ஒரு போதும் இல்லை எனவும் புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)

Related posts

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு

wpengine

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கலந்துரையாடலில் அமைச்சர் சுசில் பங்கேற்பு..

wpengine

உர பிரச்சினை – SJB ஆர்ப்பாட்டம்

wpengine