வணிகம்

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் 12.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,19360 எனவும், கடந்த ஜனவரி மாதம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 46 972 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வட அமெரிக்காவிலிருந்து வருகை தந்தோரின் எண்ணிக்கை 20.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்காவில் இருந்து வருகை தந்தோரின் எண்ணிக்கை 18.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சில விசேட பொருட்களுக்கு வர்த்தக வரி

wpengine

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட மாட்டாது

Azeem Kilabdeen

A24 செய்தி நிறுவனம் இலங்கையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியது

wpengine