உள்நாட்டு செய்திகள்

ஈ – நியூஸ் ஆசிரியருக்கு இன்னும் அழைப்பாணை ஒப்படைக்கப்படவில்லை..

நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள லங்கா ஈ – நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவை நீதிமன்றில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை இதுவரை அவரிடம் ஒப்படைக்க முடியாது போயுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு இன்று(20) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை மாநகர சபையின் முன்னாள் உப தலைவர் மதுர விதானகேவினால் இது குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தில் வௌியான செய்தி ஒன்றால் நீதிமன்றம் மற்றும் பெரும்பாலான நீதிபதிகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma

Related posts

இலங்கைக்கு புகழாரம்; சீனாவை நெருங்கும் இலங்கை

wpengine

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

இங்கிலாந்து அணி 05 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கள்…

wpengine