வணிகம்

மீன் உற்பத்தி சார்ந்த ஏற்றுமதிகள் மூலம் 500 கோடி ரூபா வருமானம்…

2017 ஆம் ஆண்டில் மீன் ஏற்றுமதியின் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அபிவிருத்தி மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மட்டக்குளியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கடல் உணவுகளின் பங்களிப்பு 44 சதவீதமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடல்சார் உற்பத்திகள் சேதமடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

wpengine

அடுத்த வாரம் முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை…

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத அளவு வீழ்ச்சியில்…

wpengine