உள்நாட்டு செய்திகள்

பேரூந்து தீ விபத்து – விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

தியதலாவ – கஹகொல்ல பிரதேசத்தில் நேற்று(21) பேரூந்து ஒன்றில் தீ பரவியமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைக்குண்டொன்று வெடித்தமையே தீ ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தீயினால் பேரூந்து முற்றாக எரிந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 19 பேர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இராணுவத்தினரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லை எனவும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இராணுவப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Brandix ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

wpengine

ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

Azeem Kilabdeen

சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா

wpengine