உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வர்த்தமானி அறிவித்தல் 02இனை சைட்டம் பெற்றோர் சங்கம் கோருகிறது

சைட்டம் மாணவர்களை கொத்தலாவல வைத்திய பீடத்திற்கு இணைத்துக் கொள்ளல் மற்றும் சைட்டம் நிறுவனத்தினை இரத்து செய்தல் ஆகிய வரத்தமானி அறிவித்தல்கள் இரண்டினையும் ஒரே நாளில் விரைவாக வெளியிடுமாறு மாலபே சைட்டம் வைத்திய பீட மாணவர்களது பெற்றோர்களது சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே, சைட்டம் வைத்திய பீட மாணவ மாணவர்களை கொத்தலாவல வைத்திய பீடத்திற்கு இணைத்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில் தீர்மானம் எட்டப்பட்டதாக அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் சட்டரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என குறித்த பெற்றோர்களது சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதலால், வர்த்தமானி அறிவித்தல் இரண்டினையும் ஒரு வார காலத்தினுள் வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதாகவும் குறித்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

#rishma

Related posts

சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen

3வது டெஸ்ட், வெற்றி – தோல்வியின்றி 2-0 என்ற நிலையில் ஆட்டம் நிறைவுக்கு

wpengine

டிரான் அலஸு’க்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…

wpengine