உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் பொருளாதார மேலாண்மைக் குழு ஜனாதிபதியினால் இரத்து…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார மேலாண்மைக் குழுவை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பொருளாதார சபைக்கே ஆகும்.

பிரதமர் தலைமையில் நிறுவப்பட்ட பொருளாதார மேலாண்மைக் குழுவினை பிரதிபலிக்கும் மற்றைய உறுப்பினர்களான ஆர்.பாஸ்கரலிங்கம், சரித ரத்வத்தே மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் ஆகும்.

கடந்த காலத்தில் குறித்த பொருளாதார மேலாண்மைக் குழு உரிய வகையில் செயற்படவில்லை என ஜனாதிபதி இதன்போது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.

 

#rishma

Related posts

பாடசாலைகள் இன்று முதல் வழமைக்கு

wpengine

கபீர் மற்றும் மலிக் ஆகியோருக்கு, பிணை முறி விசாரணை ஆணைக்குழு அழைப்பு..

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine