ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முன்னாள் ஜனாதிபதிக்கு 30 வருட சிறைத் தண்டனை…

சட்டத்துக்கு புறம்பான வழிகளில் செயல்பட்டு முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டு, பெரும் தொகையை லஞ்சமாக பெற்று உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியுன் ஹை (வயது 66) இற்கு 30 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல்கள் வாதிடுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியுன் ஹை (வயது 66). பெண் தலைவரான இவருக்கு, சோய் சூன் சில் என்பவர் நெருங்கிய தோழி.

இருவரும் சேர்ந்தே குறித்த ஊழல்களை புரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பார்க் கியுன் ஹை, கடந்த ஆண்டு பதவி இழந்தார். அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது இலஞ்சம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அரசு இரகசியங்களை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றில், அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல்கள் நேற்று(27) கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கையில், “இந்த வழக்கில் பார்க் ஹியுன் ஹைக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க வேண்டும். அத்துடன் 110 மில்லியன் டொலர் அபராதம் விதிக்க வேண்டும். நாட்டின் 18-வது ஜனாதிபதியாக பதவி வகித்த அவர், அப்போது நடந்து உள்ள ஊழல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.

அவரது தோழி சோய் சூன் சில்லுக்கு ஊழல் வழக்கில் 20 ஆண்டு சிறைத்தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டு விட்டது என்பதும் நினைவு கூறத்தக்கது.

 

 

#rish

Related posts

புதிதாக 3 மதுபான தயாரிப்புகளுக்கு அனுமதி

wpengine

அமைச்சர் ரிஷாதின் ஆதரவைக் கோரி எஸ்.பி திசாநாயாக்க எடுத்த தொலைபேசி அழைப்பு அம்பலம் (குரல்பதிவு)

wpengine

இரசிகர்களின் எதிர்ப்பினையும் மீறி குசல் களத்தில்

wpengine