உள்நாட்டு செய்திகள்

கல்வியியற்கல்லூரி நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்…

2015ஆம் ஆண்டு க. பொ. த உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்கள் கல்வியில் கல்லூரிக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக மாவட்ட அடிப்படையில் இம்முறை மூன்று மடங்கு மாணவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 19 கல்வியில் கல்லூரிகளுக்கு 27 கற்கை நெறிகளுக்காக 4745 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வியற் கல்லூரி தலைமை ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்தார்.

நேர்முகப்பரீட்சை கல்வி பீடங்களின் மாவட்ட மட்டத்தில் நடைபெறவுள்ளன.
இம்மாதம் முடிவடைய முன்னர் கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.

நேர்முகப்பரீட்சைக்காக இதுவரையில் கடிதங்கள் கிடைக்கப்பெறாதோர் 011 2784818 மற்றும் 0112 784816 என்ற தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்புகொண்டு அது தொடர்பான விபரங்களை அறிந்த கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் தகுதிக்கு அமைவாக தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

Related posts

நிறுவனங்களின் தலைவர்களுக்கான ஆலோசனை

wpengine

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் மின்வெட்டு

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு

wpengine