உள்நாட்டு செய்திகள்

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 35 பெண்கள் மருத்துவமனையில்…

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் ஆராச்சிகட்டு – ஹலம்பவட்டவன பிரதேசத்தில் இன்று(03) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பெண்கள் காயமடைந்து சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி சென்ற பேரூந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்தின் போது பேருந்தில் சுமார் 40 பெண் ஊழியர்கள் அளவில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஆராச்சிகட்டு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இஸ்லாம் மதம் தொடர்பாக பிள்ளையான் தெரிவித்த கருத்துக்கள் அப்பட்டமான பொய் – ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு..!

wpengine

இந்திய விமானியை பாகிஸ்தான் பாதுகாப்பாக இந்தியாவுக்கு ஒப்படைத்தது..

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1327 பேர் கைது

wpengine