வணிகம்

பச்சை மிளகாயின் விலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியில்…

பச்சை மிளகாயின் விலை என்றுமில்லாதவாறு கிழக்கில் வீழ்ச்சியடைந்துள்ளதால் ஈடுசெய்ய முடியாத நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது சந்தையில் 1Kg பச்சை மிளகாயின் மொத்த விலை 20 ரூபாவாக காணப்படுகின்றது. இவ்விலை தொடர்ச்சியாக இருந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதவது 1Kg பச்சை மிளகாயை பறிப்பதற்கு கூலியாக 15 ரூபா கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தங்களுக்கு 1Kg பச்சை மிளகாய் விற்றால் பறிப்பவர்களைவிடவும் குறைவான தொகையான 5 ரூபாவே இலாபமாக கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருட இறுதி மாதத்தில் 1Kg பச்சை மிளகாயின் மொத்தவிலை 780 ரூபா தொடக்கம் 880 ரூபா வரை உயர்ச்சியடைந்து காணப்பட்டிருந்தது.

சாதாரணமாக இம்மாதத்திலே 1Kg பச்சைமிளகாயின் விலை 250 ரூபா தொடக்கம் 280 ரூபா வரை செல்வது வழமையாக இருந்து வந்தது, ஆனால் இந் நிலை தற்போது தலைகீழாக மாறி பச்சைமிளகாயின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் மிளகாய் உற்பத்தியாளர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

####

Related posts

‘மொபைல் கேம் செலன்ஜ்’ போட்டியை அறிமுகம் செய்த முதலாவது உள்ளுர் வங்கி

wpengine

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு

wpengine

சகல சுற்றுலா ஹோட்டல்களையும் பதிவு செய்ய நடவடிக்கை

wpengine