உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மாலிங்கவின் உலகக் கிண்ண வாய்ப்பு குறித்து திலங்க வாய்திறந்தார்…

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க 2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டார் என கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால ஆங்கில ஊடகமொன்றுடனான நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு – 20 போட்டிக்கான அணியில் அதிக விக்கெட்களை கைப்பற்றியுள்ள லசித் மாலிங்க கடந்த சுதந்திர கிண்ண போட்டிகளில் உட்சேர்க்கப்படாமை குறித்தும், மாலிங்கவினால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாது போனதாக கூறும் கருத்துக்கள் உள்ளிட்டவை குறித்து வினவப்பட்டிருந்தது.

மேலும், இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், மாலிங்க குறித்து எதிர்வரும் காலங்களில் நம்பிக்கை வைப்பது கடினம் என்பதாலேயே தேர்வுக் குழு அவரை நிராகரித்துள்ளதாகவும், ஆதலால் மாலிங்கவின் எதிர்காலம் குறித்து கூறுவது கடினம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS]

wpengine

O/L பெறுபேறுகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும்…

wpengine

அரசியலமைப்புப் பேரவையின் முதற் கூட்டம் இன்று

wpengine