ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவுக்கு வீடு செல்ல ஹெலிகொப்டர் வழங்கியது நான் என ஜனாதிபதி மைத்திரி 2016 ஏப்ரல் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக… [Video]

2015 ஜனவரி 08ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்கல்லை செல்ல ஹெலிகொப்டர் வழங்கியது யாரு என தனக்குத் தெரியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(30) தெரிவித்திருந்தார்.

மறைந்த சங்கைக்குரிய தேரர் மாதுலுவாவே சோபித தேரரின் 76 வது பிறந்தநாள் வைபவத்தின் போதே அவரது ஆவேசமான உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

எனினும், 2016 ஏப்ரல் மாதம் 09ம் திகதி மொனராகலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலின் தோல்வியின் பிற்பாடு வீடு செல்ல ஹெலிகொப்டர் 02 வழங்கியது தான் எனத் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் குறித்த இரு உரையினதும் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் ஊடாக வைரலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த வீடியோ… 

Related posts

மங்கள’வை நிதியமைச்சு பதவியிலிருந்து விலக்கல்…?

wpengine

ஃபேஸ்புக்கில் ஆபாச கருத்தாளரை விளாசிய விசாகாவுக்கு த்ரிஷாவிடமிருந்து பாராட்டு

wpengine

தான் பெற்ற குழந்தையை நாயைப் போல் நடத்திய தாய்

wpengine