உள்நாட்டு செய்திகள்

தனியார் மருத்துவ சேவையிலிருந்து விலக போவதாக அறிவிப்பு…

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தனியார் மருத்துவ சேவையில் ஈடுபடுவதிலிருந்து விலக போவதாக விஷேட வைத்திய நிபுனர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க உறுப்பினர்களிடம் அறவிடப்படும் 24 சதவீத வரியை 12 சதவீதத்தால் குறைக்குமாறு விஷேட வைத்திய நிபுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோருடன் விஷேட வைத்திய நிபுனர்கள் சங்கம் நேற்று(11) பேச்சுவார்த்தை நடைப்பெற்றுள்ளது.

இதனையடுத்து பேச்சுவார்த்தை இறுதித் தீர்வின்றி நிறைவடைந்ததாக விஷேட வைத்திய நிபுனர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் விஜேசிங்க கூறியுள்ளார்.

தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இன்று சங்கத்தின் மத்திய செயற்குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

புதிய பிரதமரின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு!

wpengine

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக பூட்டு…

wpengine

பங்களாதேஷின் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களான தஸ்கின், அரபாத் இனது தடைகள் நீக்கம்.

wpengine