வணிகம்

இம்முறை 300 மில்லியன் மாம்பழ அறுவடை…

இம்முறை மாம்பழ அறுவடையில் குறிப்பிடத்தக்க மாம்பழத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று விவசாய அமைச்சின் அறுவடை தொடர்பான முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த நிறுவனத்தின் கீழ் மாம்பழங்களைப் பொதியிடும் எட்டு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், அனுராதபுரம், அம்பாறை, கண்டி, போகஹாகந்த, பேராதனை, வெல்லவாய ஆகியன இதில் முக்கிய இடம் வகிக்கின்றன.

பொதியிடும் வலயங்களில் நாளாந்தம் 15 மில்லியன் மாம்பழங்கள் பொதியிடப்படுகின்றன. இரசாயனத் திரவங்கள் பயன்படுத்தப்படாத முறையில் மாங்காய்களை பழுக்க வைப்பதற்காக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.

இம்முறை 300 மில்லியன் மாம்பழங்களை அறுவடையாக பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Related posts

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் சிக்கினர்

wpengine

சீனி மற்றும் சீமெந்து கைத்தொழில் துறைகளில் முதலீடு செய்யுமாறு பாகிஸ்தான் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு…

wpengine

பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

wpengine