கேளிக்கை

பணத் தேவைக்காகவே ஆபாச படக் காட்சிகளில் நடித்தேன்…

ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பில் தனது காலை அந்த நடிகர் உரசி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவரது ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு;

“சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. உறவினர்கள் இல்லாதவர்கள் கஷ்டப்பட வேண்டி உள்ளது. பட வாய்ப்புக்கு அவர்கள் போராடும் நிலை இருக்கிறது. பின்புலம் உள்ளவர்கள் உறவினர்கள் உதவியால் வாய்ப்புகள் பெற்றாலும் திறமை இருந்தால்தான் அவர்களால் நிலைக்க முடியும். நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்த போது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக் கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.” இவ்வாறு ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

Related posts

விஜய் படத்தில் 100 குழந்தைகளுக்கு கிடைத்த வாய்ப்பு…

wpengine

தனுஷுக்கு DNA பரிசோதனை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…

wpengine

அனைவரும் பார்த்திருக்க ரஷ்யப் பிரபல மொடலின் ஆடை கலைந்தது.. (VIDEO)

wpengine