உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசிலிருந்து விலகிய ஸ்ரீ.சு.கட்சியின் 16 பேர் கொண்ட குழு இன்று பசிலுடன் சந்திப்பு…

அரசினை விட்டும் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரைக் கொண்ட குழுவானத்து, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்க உள்ளது.

தாமரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் இன்று(28) 04.00 மணியளவில் குறித்த இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

அண்மையில் பசில் ராஜபக்ஷ அரசியல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், பொதுஜன முன்னணியானது பெரிய சமுத்திரமாக உள்ள நிலையில் அதற்கு கழிவுக் கால்வாய்களும் அடிபட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இதனை தமக்குக் கூறியதாக அரசில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட குழு எதிர்ப்பலைகளை வெளியிட்டிருந்த நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Update – இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 500 இற்கும் அதிகமானோர் பலி…

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 24 பேர் குணமடைந்தனர்

wpengine

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இங்கிலாந்து அணியில்..

wpengine