உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் குறித்த விவாதம் எதிர்வரும் 05 ஆம் திகதியன்று…

எல்லை நிர்ணய அறிக்கை தயாரித்த பின்னர் மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்ததாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று(28) சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலை தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடிருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் சபாநாயகர் கரு ஜயசூரிய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தலைவர், தேர்தல் ஆணையாளர் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

wpengine

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச ஜனாதிபதி இதயசுத்தியுடன் அழைத்தால், அதில் பங்கேற்பதற்கு தயார்!

wpengine

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து

Azeem Kilabdeen