உள்நாட்டு செய்திகள்

ஜாதிக ஹெல உறுமய பௌத்த மதத்தை சீரழித்து விட்டனர் – துறவிகளின் குரல்

இந்நாட்டில் ஜாதிக ஹெல உறுமய போன்று பௌத்த மதத்தை சீரழித்தவர்கள் எவரும் கிடையாது என்று ´துறவிகளின் குரல்´ (පැවදි හඬ) அமைப்பின் ஆலேசகர் வணக்கத்திற்குரிய பொங்கமுவே நாளக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து கருத்துக் கூறுகையில்; மேற்கு நாடுகளின் பணத்துக்கும் மோகங்களுக்கும் அடிமைப்பட்டு நாட்டின் தேசியத்துவத்தை சீரழித்துள்ளதாக இன்று நாரஹேன்பிட்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொங்கமுவே நாளக தேரர் தெரிவித்தார்.

நாட்டுக்காக மஹிந்தவா அல்லது வயிற்றுக்காக ரணிலா என்று இந்த முறை தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கட்சி மாறுவதில்லை என்று மக்கள் உறுதிமொழி ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு கட்சி மாறுவது ஜனநாயக விரோத செயற்பாடு என்றும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் எந்தவொன்றும் இற்றை வரை நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மர்வின் சில்வா மற்றும் ரணில் விக்ரமசிங்க போன்றோர் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாமையே மஹிந்த ராஜபக்ஷ செய்த தவறாகும் என்று ´துறவிகளின் குரல்´ அமைப்பின் ஆலேசகர் வணக்கத்திற்குரிய பொங்கமுவே நாளக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

(riz)

Related posts

ஜனாதிபதியின் வவுனியா விஜயம் : எதிர்ப்பு தெரிவித்து உறவுகள் போராட்டம்..!

wpengine

21வது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுல்..!

wpengine

வன வள பாதுகாப்பு திணைக்கள காடுகளில் அகழ்வதற்காக வழங்கப்படும் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்…

wpengine