உள்நாட்டு செய்திகள்

கோட்டாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைகாலத் தடை…

எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரா கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மீள்பரிசீலனை மனுவின் விசாரணைகள் நிறைவு பெறும் வரையில் இந்த தடையுத்தரவு அமுலாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய வழக்கின் போது இரண்டு தரப்பு வாதங்களையும் கவனத்திற் கொண்ட நீதிமன்றம், இந்த தடை உத்தரவை பிறப்பித்ததுடன், இது தொடர்பில் எதிர்ப்பு இருப்பின் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி தாக்கல் செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த மனுவை மீண்டும் செப்டம்பர் மாதம் 28ம் திகதிக்கு விசாரணை செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

லொஹான் ரத்வத்தே இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் 

wpengine

நீரினை வீண்விரயம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine

ஒருநாள் போட்டியில் விரைவாக 5 சதங்களை விளாசிய 2-வது வீரர் என்ற பெருமை பாக்.அணி வீரர் பாபர்’க்கு..

wpengine