உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளை 16 மணி நேர நீர் விநியோகம் தடை…

அத்தியவசிய திருத்தப் பணி காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை(15) 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை(15) காலை 08.00 மணி முதல் நள்ளிரவு வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

விமான சேவையின் போக்குவரத்து தாமதம் குறித்து அறிக்கை…

wpengine

ஏலத்திற்கு வரும் V8 சொகுசு வாகனங்கள்!

Azeem Kilabdeen

ஐக்கிய மக்கள் சக்தி, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

News Editor