உலக செய்திகள்

இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு…

இத்தாலியில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலி கேலாப்ரியா மாகாணத்தில் பொலினோ தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் ஒருபகுதியக ராக்னெல்லோ எனும் நீர் ஓடையை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில், இந்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக இந்த ஓடைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டமையினால், இந்த ஓடையை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலாப் பயணிகள் 8 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், 18 பேர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர் அவர்களில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சுற்றுலாப் பயணிகள் யாரும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் இப்பகுதிக்கு சென்றுள்ளதால் மொத்தம் எத்தனை பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

Related posts

தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் – ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவுள்ள மார்க் ஸக்கர்பெர்க்…

wpengine

இஸ்ரேலில் அயல்நாட்டினர் வெளியேற்றத்தை எதிர்த்து பேரணி…

wpengine

புதிய மருத்துவமனை 10 நாட்களுக்குள் – சீனா அரசு

wpengine