உள்நாட்டு செய்திகள்

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் உபதலைவர் கைது…

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் உப தலைவர் லட்சுமணன் பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(21) காலை நகர சபையின் உப தலைவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுடன், பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று(21) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனமொன்றிற்கு சொந்தமான காணிக்குள் பலவந்தமாக நுழைந்து நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணிக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்ததில் 20,000 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கடந்த 9 ஆம் திகதி தோட்ட முகாமைத்துவத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

வறுமை ஒழிப்பு அபிவிருத்திக்கு குழுவொன்று உருவாக்கம்

wpengine

மிகை வரி சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

wpengine

கொழும்பில் நாளை முதல் புதிய போக்குவரத்து திட்டம்

wpengine