உள்நாட்டு செய்திகள்

11 மணிநேர சுற்றிவளைப்பில் 3099 பேர் கைது…

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட 11 மணிநேர விசேட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3099 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 4967 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும், தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நேற்று(24) இரவு ஒன்பது மணி முதல் இன்று(25) காலை 8 மணிவரை இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

சிசிலியா கொத்தலாவலவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

புதிய வேலைத் திட்டத்துடன் SLFP

wpengine

சஜித்துக்கு சிரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு..!

wpengine