உள்நாட்டு செய்திகள்

இருவரில் ஒருவர் கைது செய்யப்பட வேண்டும்… – சம்பிக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடாத்தாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

மேலும், விசாரணையின் முடிவில் ஒன்றில் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் அல்லது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

சு.க சர்ச்சைகளை ஏற்படுத்தினால் ஐ.தே.கட்சி தனியாட்சி

wpengine

மலிக் மற்றும் அமரவீரவின் அமைச்சுப் பதவிகள் பறிபோகலாம் – ஜீ.எல்..

wpengine

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

wpengine