உள்நாட்டு செய்திகள்

வவுனியா தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

வவுனியா தனியார் பேரூந்து ஊழியர்கள் நேற்று(18) மாலை முதல் மீண்டும் தங்களது பணியில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் முதல் அக்கரைப்பற்று வரையிலான சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று மற்றும் வவுனியா முதல் அக்கரைப்பற்று வரையிலான சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேரூந்து ஒன்றுக்கும் இடையிலான முரண்பாடுகளாலேயே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அனைத்து மாகாண மற்றும் மாகாணங்களுக்கு ஊடான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வவுனியா தனியார் பேரூந்து நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி

wpengine

ஆணைக்குழு விசாரணை முன்னிலையில் ஆஜராக முடியாது – மஹிந்த

wpengine

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…

wpengine