உள்நாட்டு செய்திகள்

விஷேட சுற்றிவளைப்பில் 32 பேர் கைது…

மாத்தளை மாவட்டத்தில் 12 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப் படி தம்புள்ளை, கலேவல, சீகிரிய, நாஉல பொலிஸ் நிலையங்கள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சா மற்றும் ஹெரோய்ன் வைத்திருத்தல், சட்டவிரோத மணல் கடத்தல், நீதிமன்றத்தை புறக்கணித்தல், மது போதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டுக்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புள்ளை மற்றும் நாஉல நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஊடகவியலாளர்களுக்கு கன்னத்தில் அறைந்திருப்பேன் – எதிர்க் கட்சித் தலைவர்

wpengine

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் ஆப்று மாடியிலிருந்து விழுந்து மரணம்..

wpengine

அர்ஜுனவுக்கு எதிராக பிடியாணையை செயற்படுத்துமாறு உத்தரவு

wpengine