உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலைக்கு விஜயம்…

திருகோணமலையில் இன்று(20) உத்தியோகபூர்வ நிகழ்வுகள் சிலவற்றில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை விஜயம் மேற்கொள்ளவுள்ளதொடு, எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமது குலதெய்வக் கோயிலான திருகோணமலை ஸ்ரீ ஆதிபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட வரவேற்பு மரியாதையை வழங்கும் சம்பந்தன், அதன் பின்னர் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுகளில் ஈடுபடுவார் எனத் தெரிகின்றது.

தமிழ் கைதிகள் விடுதலை விவகாரம், ஐ.நா. தீர்மானம் மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

மீள்சுழற்சி மையத்துக்கு குப்பைக் கூளங்களை கொண்டும் செல்லும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையில் புகையிரத சேவை…

wpengine

பிரதமர் இன்று மல்வத்து மகா சங்கத்தினரை சந்திக்கிறார்

wpengine