உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஷாகிப் அல் ஹசன் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் இருந்து விலகல்…

இந்தியாவுடன் நாளை(28) நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹசன் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவரது இடது கை விரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இவ்வாறு போட்டிக்கான வாய்ப்பு தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஆவறது உபாதை நிலைமை காரணமாக நேற்று(26) பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் பங்கேற்கவில்லை.

குறித்த நிலைமை காரணமாக 06 வாரங்களுக்கு ஹசனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், நிவ்யோர்க் அல்லது மெல்போர்ன் சென்று அவரது விரலுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

15ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

wpengine

மெனிக்கின்ன சம்பவம் தொடர்பில் 07 பேர் கைது – 03 பொலிஸ் அதிகாரிகள் காயம்…

wpengine

ஜனாதிபதிக்கு றிப்கான் பதியுதீன் அவசர கடிதம்…

wpengine