உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு…

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 06 பேருக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் டிசம்பர் 12ம் திகதிக்கு விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிகளின் கோரிக்கைகளின்படி சரத் குமார குணரத்னவுக்கு டிசம்பர் 10ம் திகதி வரையான காலம் வௌிநாட்டுப் பயணத் தடை விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இன்று மழையுடன் கூடிய காலநிலை

wpengine

துறைமுக கிழக்கு முனையம் தொடர்பிலான அறிவித்தல்

wpengine

எண்ணெய் குத ஒப்பந்தத்துக்கு எதிராக மனு

wpengine