உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை ஆதரித்த தொண்டருக்கு மஹிந்தவினால் தாக்குதல்

நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்சி தொண்டரை தாக்கியமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ தொகுதியில்  தேர்தல் பிரச்சாரத்தின் போதே இவ் அசம்பாவிதம்  நடைபெற்றுள்ளது.

அப்போது தொண்டர் ஒருவர்  முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ மேடையில் ஏறுவதற்கு முன்பாக அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஹிந்த ராஜபக்ஷ அவரை  நோக்கி தாக்கியுள்ளார்.

காணொளியினை பார்க்க;

[youtube url=”https://www.youtube.com/watch?v=sYwuwfzHzVU” width=”560″ height=”315″]

பின்னர் அவரது பாதுகாவலர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் உறுப்பினர்களும் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். பின்னர் மேடையில் ஏறிய அவர் புத்த பிக்குகளுக்கு மரியாதை செலுத்தினார்.

மேலும் எதுவும் நடக்காதது போல் தொண்டர்களை நோக்கி கையையும் அசைத்தார்.

தொண்டருக்கே கை நீட்டும் வேட்பாளருக்கு வாக்களிக்கவும் யோசிக்கணும் நம்ம சனம்…

(riz)

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி இடையில் சந்திப்பு..

wpengine

தப்போவ பகுதியிலிருந்து வில்பத்து வரை விசேட சுற்றுலா வலயம் – 15,000 தொழில் வாய்ப்புக்கள்…

wpengine

இன்றைய இரவு நேர இசை நிகழ்ச்சியில் “ப்ரா” வீசத்திட்டம் – பாதுகாப்பு படையினர் உசார் நிலையில்

wpengine