உள்நாட்டு செய்திகள்

பிரதமருடன் இணைந்து திட்டம் ஒன்றினை தீட்டிக் கொள்ளுமாறு சுவாமி தமிழ் தலைவர்களிடம் கோரிக்கை…

தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றி திட்டம் ஒன்றினை வகுத்துக் கொள்ளுமாறு, தான் இலங்கை தமிழ் பிரஜைகளிடம் விசேடமாக ஆர்.சம்பந்தனுக்கும் ஏனைய தமிழ் தலைவர்களிடமும் தயவாய் வேண்டிக் கொள்வதாக இந்திய பாராளுமன்ற உறுப்பிர சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

இரு தரப்பினர்களிடையேயான பேச்சுவார்த்தைகளில் தான் தலையிட்டு சுமுகமான பதிலொன்றினை பெற்றுத் தரவும் தயாராகியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளுமாறு தான் இலங்கை வாழ் பிரஜைகளை கேட்டுக் கொள்வதோடு, விசேடமாக ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் பிரமுகர்களை தயவாய் கேட்டுக் கொள்கின்றேன்.இரு தரப்பினரினதும் பேச்சுவார்த்தைகளுக்கு தனது பங்களிப்பு அவசியம் எனக் கருத்தின் தான் முழுமையாக ஒத்துழைக்கவும் தயார்”.

Related posts

தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினைகளை தீருங்கள்!

Azeem Kilabdeen

காலநிலையில் திடீர் மாற்றம்…

wpengine