உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற சுற்றுவட்டத்தினை அண்டிய பகுதிகளில் வீதிப்போக்குவரத்து மட்டு…

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று(05) இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அதனை அண்டிய பகுதிகளில் வீதிப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட வாகனத்திட்டம் மற்றும் வீதிப்பாதுகாப்பிற்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள பேரணி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தியத்தஉயன மற்றும் பொல்துவ உள்ளிட்ட பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு வரும் வாகனங்கள் இன்று(05) நண்பகல் 12.00 மணி தொடக்கம் மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் கடுவெல அத்துருக்கிரிய மாலபேக்கிடையில் செல்லும் வாகனங்கள் மாற்று வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை வான்கள் மற்றும் பஸ்களும் மாற்று வழிகளில் செல்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் வாகனங்களை கையாள்வதற்காக மாத்திரம் 300 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சிறுநீரக மோசடி விவகாரம் – 7 இந்தியரும் தப்பியோட்டம்.

wpengine

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை…

wpengine

சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

wpengine