உள்நாட்டு செய்திகள்

உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் மாலை 05 மணி வரை ஒத்திவைப்பு.. (Update)

பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளன.

உச்ச நீதிமன்றமானது மனுக்களை ஆராயும் நடவடிக்கையினை சற்றுமுன்னர் (03.30) முதல் மாலை 05 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த மனுக்களின் மீதான நிலைப்பாடு மாலை 05.00 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

+++++++++++++++++++++++  UPDATE 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணை…

பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனுக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சனியன்று வரவு செலவுத் திருத்தங்கள் அறிவிக்கப்படும் – அவைத் தலைவர்

wpengine

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை…

wpengine

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

wpengine