உலக செய்திகள்

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை..

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை கொண்டுவர கன்சர்வேடிவ் கட்சி தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பிரிட்டன் ஓர் உடன்பாடு செய்து கொண் டுள்ளது. அந்த நகல் உடன்பாட்டிற்கு பிரிட்டிஷ் அமைச்சரவையில் போதிய ஆதரவு இருந்தால் மட்டுமே அந்த உடன்பாடு நடைமுறைக்கு வரும். ஐரோப்பிய ஒன்றிய அமைப்பி லிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தெரேசா மே சிரமப்பட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் உடன்பாடு கண்டுள்ள நிலையில், குறித்த உடன்பாட்டிற்கு பிரிட்டனில் எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்..

wpengine

காஸாவில் தினசரி குழந்தைகள் இறப்பு 160 ஆக உயர்வு – ஐக்கிய நாடுகள் சபை..!

wpengine

UPDATE – தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கம்,சுனாமி எச்சரிக்கை விடுப்பு..

wpengine