உலக செய்திகள்

ஈரானில் நிலநடுக்கம் – 170 பேர் காயம்…

ஈரானின் மேற்கு பகுதியில் நேற்றிரவு(25) ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் தாக்கிய இடங்களில் 6 மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், மேலும் இராணுவம் மற்றும் துணை இராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அண்டார்டிக்கா பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த நபருக்கு மரணதண்டனை…

wpengine

எதிர்வரும் 12ம் திகதி திட்டமிட்டபடி சந்திப்பு…

wpengine