உள்நாட்டு செய்திகள்வணிகம்

சீன நிறுவனத்துடன் 02 ஒப்பந்தங்களில் கைச்சாத்து…

கொழும்பு துறைமுகத்தின் ஜயபஹலும் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம், சீன நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜயலஹலும் முனையத்தை ஆழமாக்கி, நங்கூரமிடக்கூடிய வசதியுடன் உருவாக்கும் நோக்கில், சைனா ஹர்பர் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகி இருக்கின்றன.

32 மில்லியன் டொலர்கள் பெறுமதியான வேலைத்திட்டங்கள் இவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் 3 பாரிய பளுத்தூக்கிகளை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை, செங்காய் பென்னுவா ஹெவீ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்பெறுமதி 25.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை போக்குவரத்து சேவையின் 02ம் கட்ட சேவை…

wpengine

பதாதைகள் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை

wpengine

நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை நாளை(17) முதல்…

wpengine