உள்நாட்டு செய்திகள்வணிகம்

பிட்ச் ரேடிங், இலங்கையின் தரவரிசையினை கீழிறக்கியது…

இலங்கை கடன் மதிப்பீட்டு தரவரிசையானது B+ முதல் B மதிப்பீடு வரையில் குறைத்துள்ளதாக பிட்ச் ரேடிங் நிறுவனம் (Fitch Rating) தெரிவித்துள்ளது.

குறித்த வீழ்ச்சிக்கு, கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதுடன் உருவாகிய அரசியல் சர்ச்சை நிலைகளே பிரதான காரணம் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நிதி அதிகரிக்கும் அவதானம், கொள்கைகளின் ஸ்தீரமின்மை, நாணய கொள்கைகளில் ஏற்படும் முரண்பாடுகள் ஆகியவை குறித்த அரசியல் சர்ச்சையின் காரணமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பிட்ச் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்னர் மூடிஸ் நிறுவனமானது, இலங்கையின் கடன் மதிப்பீட்டு தரவரிசையினை கீழிறக்க நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜின் வாசுக்கு தொடர்ந்தும் VIP காவலர்கள்

wpengine

கந்தக்காடு : தொடர்ந்தும் PCR பரிசோதனைகள்

wpengine

மொனராகலை பகுதியில் கோர விபத்து – கணவனும், கர்ப்பிணி மனைவியும் பரிதாப பலி

wpengine