கேளிக்கை

6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கணவருடன் நடனம் ஆடுகிறார் ஜெனிலியா…

பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜெனிலியா மீண்டும் நடிக்கவுள்ளார்.

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, இந்தி நடிகர் ரித்தேன் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

6 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். முதலில் கணவர் ரித்தேஷ் நடிக்கும் மவுலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

தொடர்ந்து ஜோதிகா, சமந்தா போல தனக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடிக்க இருக்கிறார். திருமணமான நடிகைகளுக்கும் தனி மார்க்கெட் உருவாகி வருவதால் ஜெனிலியா மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

Related posts

சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர காலமானார்

wpengine

சிறந்த மணமகள் போட்டியில் சமந்தா முன்னிலை…

wpengine

எனக்கு டப்பிங் பானுப்பிரியாவா? கீர்த்தி சுரேஷ் மறுப்பு…

wpengine