உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட இருவர் கைது…

பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட இருவர் மாத்தறை – திஹகொட பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியில் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திர உபகரணங்களை அனுமதிப்பத்திரமின்றி டிபர் வண்டியில் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்ட போதே குறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டிபர் வண்டியை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் போது அதில் இருந்த ஒருவர் 20,000 ரூபா பணத்தை பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சமாக கொடுக்க முற்பட்டுள்ள போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

39 வயது மற்றும் 54 வயதுடைய திக்கெவ்லை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட இருவரும் இன்று(05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

மாணவி கடத்தலுக்கான காரணம் வௌியானது

Azeem Kilabdeen

NIVAR வலுக்கிறது

wpengine