உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுமார் 2778 மில்லியன் ரூபா பெறுமதியுடனான ஹெரோயினுடன் இருவர் கைது…

பலப்பிட்டிய – பேருவளை கடற்பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு(05) சுமார் 231 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 231 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவற்றின் பெறுமதி சுமார் 2778 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

பாடசாலை மாணவிக்கு பிறந்த குழந்தை..!

wpengine

ஒரு சிகரெட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை.

wpengine

சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் இலங்கை வருகிறார்..

wpengine