உள்நாட்டு செய்திகள்

இன்று 18 மணிநேர நீர் விநியோகத் தடை…

வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று(15) நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர் விநியோகம் தடை செய்யப்படவிருப்பதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று(15) நள்ளிரவு 12 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, மோரகஸ்முல்ல, இராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல கொஸ்வத்தை மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உடனடி ஆபத்தில் உள்ள, நாடாக இலங்கை..!

wpengine

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

wpengine

ராஜாங்கனே தேரரின் வங்கிக் கணக்கில் 8 கோடி ரூபா..?

wpengine