உலக செய்திகள்

நைஜீரியாவில் 17 பேரை சுட்டுக்கொன்ற கும்பல்…

நைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் திடீரென ஊருக்குள் புகுந்த ஒரு குழுவினர், அங்குள்ள 17 பேரை சுட்டுக் கொன்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக ஜம்பாரா, கதுனா மாநிலங்களில் துப்பாக்கிகளுடன் வந்து தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.

ஜம்பாராவில் மட்டும் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்பாரா மாநிலம் பாரு மாவட்டம் மகாமி கிராமத்தில் சனிக்கிழமை திடீரென நுழைந்த மர்ம நபர்கள், அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொண்டு தாக்குதல் நடப்பதை தடுக்கும் வகையில், கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கலிபோர்னியா காட்டுத் தீ – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

ஓகஸ்ட்டில் டோனி பிலேயர், ஒபாமாவின் இலங்கை விஜயம்

wpengine

மியன்மாரை தாக்கிய சூறாவளி

News Editor