உலக செய்திகள்

மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 7 பேர் உயிரிழப்பு…

மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவின் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பிளயா டெல் கார்மன் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தப்பதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்பெயினில் மீண்டும் அவசரநிலை

wpengine

ஆங் சான் சூகி உள்ளிட்டோரின் விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

wpengine

உலகளவில் 2 இலட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்

wpengine