உலக செய்திகள்

சூடானில் அரசுக்கு எதிராக போராட்டம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு பொலிஸார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

Related posts

ஒன்றன் பின் ஒன்றாக யானைகள் பாறைகளில் வீழ்ந்து உயிரிழப்பு! [VIDEO]

wpengine

சட்டம் அனு­ம­தி­ய­ளித்தால் பாலியல் துஷ்­பி­ர­யோக குற்­ற­வா­ளி­களை சம்­பவ இடத்திலேயே சுட்­டுக்­கொல்வேன் – டில்லி பொலிஸ் ஆணை­யாளர்

wpengine

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா

wpengine