உள்நாட்டு செய்திகள்

பொகவந்தலாவையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து…

பொகவந்தலாவை – ரொக்கில் தோட்டம், வானக்காடு பகுதியில் லயன் குடியிருப்பில் இன்று(29) பரவிய தீ காரணமாக 14 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வானக்காடு தோட்டத்திலுள்ள ஆலயத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், பொகவந்தலாவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் வழங்க 15 கோடி ரூபாய்

News Editor

உடுவே தம்மாலோக தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு – இரகசியப் பொலிசார் விசாரணையில்

wpengine

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க நியமனம்…

wpengine