ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இஷாவின் ஆசை

விலங்குகள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து விலங்குகள் உரிமைக்கு குரல் கொடுத்துவரும் பொலிவூட் நடிகை இஷா குப்தா, இனிமேல் சைவ உணவுகளை மாத்திரம் சாப்பிடுவதற்கும் பசும்பால் மற்றும் அதுசார்ந்த உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் தீர்மானித்துள்ளாராம்.

கவர்ச்சி நடிகையான அவர், தான் இனிமேல் அசைவ உணவுகளை உண்ணுவதில்லை என்று கூறியுள்ளதுடன் அதனை செயற்படுத்திக்  காட்டவும் தயாராகிவிட்டாராம்.

இஷா குப்தாவின் இந்த முடிவை அடுத்து, சைவ உணவு உண்ணும் பழக்கத்தை அவரது சகாக்களும் பின்பற்றுவதால் தற்போது மகிழ்ச்சியில் உள்ளாராம்.

சைவ உணவு உண்ணும் ஒருவர், விலங்குகள் துன்புறுத்தப்படுதையும் கொல்லப்படுவதையும் தடுப்பதாக கூறும் இஷா, சைவ உணவுகளானவை உடல்நலத்தை பாதுகாத்து புதுப்பொலிவை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றார்.

இஷாவின் இந்த வேண்டுகோளை அவரது இரசிகர்களும் பின்பற்ற ஆரம்பித்துள்ளதாக பொலிவூட் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

Related posts

ஹதுருசிங்கவை நீக்கி, இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன்..?

wpengine

இந்நாட்டு வைத்தியர்களும் ISIS பயங்கரவாத அமைப்பில்… – ISIS மருத்துவர் அதிரடித் தகவல்..

wpengine

தாஜுதீன் கொலை – கோத்தபாயவை காட்டிக்கொடுக்கவே மாட்டேன் – அனுர உறுதி…

wpengine