வணிகம்

சம்பா அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க இணக்கம்…

எதிர்வரும் பண்டிகைக் காலத்துடன் இணைந்ததாக ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு விநியோகிக்க நெல் ஆலை நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இலங்கையின் முன்னணி ஆலை உரிமையாளர்கள் சிறிய அளவிலான ஆலை உரிமையாளர்கள் ஆகியோருடன் விவசாய அமைச்சு அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் பீ.ஹரிசன் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஒரு கிலோ நெல்லின் விலையைப் போன்று இருமடங்கு விலைக்கு அரிசியை விநியோகிக்கலும் ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்னர்.

மேலும், பெரும்போக அறுவடை நெல்லை விலைகொடுத்து வாங்கும் நடைமுறையில் அரசாங்கத்தின் உத்தரவாத விலைப்பட்டியலை தத்தமது களஞ்சியசாலைகளில் காட்சிப்படுத்த ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்தார்கள்.

இதன் பிரகாரம் ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவிற்கும் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படும்.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் CRT வர்த்தக கண்காட்சி ஆரம்பம்..

wpengine

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி நாளை(24) ஆரம்பம்

wpengine

வட்டக்காய் கிலோ கிராம் ஒன்றுக்கான விலை ரூ.200

wpengine