உள்நாட்டு செய்திகள்

01 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

காலி அனுலா தேவி பெண்கள் வித்தியாலயத்தின் அதிபர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொள்ள முற்பட்ட சந்தர்ப்பத்தில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 ஆம் ஆண்டிற்கு மாணவன் ஒருவரை சேர்ந்துக் கொள்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வாரங்களாக குறித்த மாணவன் பாடசாலைக்கு வருகை தந்த போது அவருடைய பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 1 இலட்சம் ரூபா கொடுக்காவிடின் மாணவனை அழைத்து செல்லுமாறு குறித்த பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெற்றோர் இந்த விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இன்று(13) இலஞ்சத் தொகையை அதிபர் அலுவலகத்தில் வழங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் சர்வக் கட்சி கூட்டம் ஆரம்பம்…

wpengine

பாடசாலையில் இருந்து டெனேட்டர்கள் மீட்பு

wpengine

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி…

wpengine